சரியான முறையில் நீரை அருந்துவது எப்படி? நன்மைகள் என்ன?

அவசரமான இந்த உலகில் நம்மில் சிலர் அலட்சியமாக கடைபிடிக்கும் ஒரு பழக்கமாக நீர் அருந்துவது இருந்துவருகிறது. என்ன நீர் அருந்துவதை கூடவா எப்படி என்று சொல்லித்தருவீர்கள்! இது ரொம்ப வேடிக்கையாக இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் நமது உடல் உறுப்புகள் சரியாக இயங்க வேண்டுமென்றால் அதற்கு போதுமான நீர் அருந்துவது அவசியமாக இருக்கின்றது. எனவே இந்த கட்டுரையை முழுமையாக வாசித்து நீரை எப்போது, எப்படி ,எந்த அளவுக்கு, எந்த முறையில் குடிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..

சாதாரணமாக ஒரு மனிதனின் உடல் 60% – 70% நீரை சேமித்து வைக்கும். நாம் என்னதான் பழவகைகள், முட்டை, மீன், இறைச்சி என்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், அதை முழுமையாக சமிபாடு அடைந்து அதில் உள்ள சத்துகள் நம் உடலில் சேர வேண்டும் என்றால் போதிய அளவு நீர் அவசியமாக இருக்கின்றது. எனவே நீரை எந்த முறையில் குடிக்க வேண்டுமென்று பார்ப்போம்.

தண்ணீரை இரண்டு வகையாக பிரிக்கலாம் நல்ல நீர் மற்றும் சுத்தமான நீர். இவை இரண்டுக்கும் வித்தியாசங்கள், நல்ல நீரானது தாதுப்பொருட்களும், உயிர் சக்தியும் அடங்கியிருக்கும் அத்துடன் நோய் கிருமியும் அடங்கி இருப்பதுதான் நல்ல நீர் என்று அழைக்கப்படுகின்றது. சுத்தமான நீரானது சத்துக்களும், நோய்க்கிருமிகளும் இல்லாததாகவே இருக்கும்.

இந்த நல்ல நீரானது இயற்கையாகத் குளத்திலும், ஆற்றிலும், கிணற்றிலும், நிலத்தடி நீரிலும் கிடைக்கக்கூடியவை. சுத்தமான நீரானது மேலே குறிப்பிட்ட நல்ல நீரிலுள்ள நல்ல சத்துக்கள் மற்றும் கெட்ட சத்துக்களை வடிகட்டி எடுப்பதாகும்.

எனவே நல்ல நீரில் உள்ள கிருமிகளை மாத்திரம் நீக்கி, சத்துக்களுடன் நீரை எப்படி பருகலாம் என்று பார்ப்போம்.

ஒரு மண்பானையில் 2 தொடக்கம் 5 மணிநேரங்கள் நீரை ஊற்றி வைத்து பருகினால் அந்த மண்ணில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைத்துவிடும். இரவில் தாமரை பாத்திரத்தில் நீரை எடுத்து வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை பயன்படுத்த முடியும்.

சாதாரணமாக நீரை சூடாக்கி குடிக்கக்கூடாது ஏனென்றால் அதில் உள்ள உயிர் சக்திகள் இறந்து விடும் இதனால் நமது உடலுக்கு கிடைக்கவும் இந்த சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

பெரும்பாலானோரின் வழக்கமாக இருப்பது சாப்பிட்ட உடனே இரண்டு டம்ளர் நீரை அருந்தினால் திருப்தியான ஒரு உணர்வு, ஆனால் இது ஒரு தவறான செயலாகும். நாம் சாப்பிடும் உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் ‘ஹைட்ரோ குளோரிக் ஆசிட்’ வெளியே வந்து நாம் சாப்பிட்ட உணவுகளை அரைத்து சமிபாடு அடைய செய்யும். ஆனால் நாம் சாப்பிட்ட உடனே நீர் அருந்தினால் வெளிவரும் அந்த ஆசிட்டின் வீரியம் குறைந்து உணவை சரிவர சமிபாடு அடைய வைக்க முடியாமல் போய்விடும்.

எனவே இவ்வாறான உணவுகள் சரியாக அல்லது முழுமையாக சமிபாடு அடைய வில்லை என்றால் அந்த உணவிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். மேலும் இது நமது உடலில் அசிடிட்டி, கேஸ் ட்ரபுள், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னராக நீர் அருந்தவேண்டும் அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நீர் அருந்த வேண்டும்.

சாப்பிட்டு இவ்வளவு நேரத்திற்கு பிறகு நீர் அருந்துவது என்பது சிலருக்கு மிகவும் கடினமாக தான் இருக்கும். எனவே சமைக்கும்போது காரத்தன்மையை சற்று குறைத்தல் மற்றும் கோழி, இறைச்சி போன்ற கடினமான உணவுகளை நன்றாக மென்று சாப்பிடும் போது அது தொண்டையில் சிக்காமல் நீர் அருந்துவதை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்து ஏதாவது உணவை சாப்பிட்டவுடன் நமது உடல் வெப்பநிலை அதிகரித்து அந்த உணவை சமிபாடு அடியச் செய்யும் எனவே சாப்பிட்டவுடனே குளிரான நீரை அருந்துவதால் நமது உடலில் வெப்பநிலை குறைந்துவிடும். ஆகையால் குளிரான நீரை அருந்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

சிலர் சொல்வார்கள் தினமும் 10 அல்லது 15 லிட்டர் நீரை அருந்த வேண்டும் என்று ஆனால் நாம் என்னதான் நீர் அருந்தினாலும் நமது தேவையில்லாத நீரை நமது சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். நமது உடல் செல்களில் ‘ப்ளூ’ அளவு அதிகரித்தால் உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இது மூளையை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

நாம் தினமும் நீரை சரியான அளவில் தானா கொடுத்து வருகின்றோம் என்பதை மிகவும் இலகுவாக பரிசோதித்து பார்க்க முடியும். ஒருவரின் சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறங்களில் வெளியேறினால் அவர் குடித்து உள்ள நீரின் அளவு சரியான. அதுவே அடல் மஞ்சள் நிறமாக வெளியேறினால் அவர் தினமும் பருகும் நீரின் அளவு குறைவானது. எனவே இதைக் கொண்டு நமக்கு நாமே நீரின் அளவை நிர்ணயம் செய்து கொள்ள முடியும்

நின்றுகொண்டே நீர் அருந்தும்போது முழங்கால் வலி ஏற்படும், காரணம் நமது உடம்பில் உள்ள புளுட் அளவு சமநிலை இல்லாமல் போவதால் இந்தப் பிரச்சினை ஏற்படும். மேலும் சிறுநீரக கோளாறு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலும் நீரை விரைவாக குடிக்காமல் சொட்டுச் சொட்டாகவே அருந்த வேண்டும் ஏனென்றால் நாம் சொட்டுச் சொட்டாக நீரை அருந்தும் போது நமது உமிழ் நீருடன் அது வயிற்றுக்குள் சென்று நமது உணவுகளை சமிபாடு அடைய உதவி செய்யும்.

எனவே இனிமேல் அவசரப்படாமல் ஆற அமர்ந்து ஒவ்வொரு சொட்டாக நீரை குடிப்போம், சரியான நேரத்தில் குடிப்போம், அளவுக்கு குடிப்போம்.

To Top